ஊடகவியலாளர் சுதர்மனின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மகன் காயம்.
கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஐரிஎன் தொ லைக்காட்சியின் பிரதான ஊடகவியலாளர் சுதர்மனின் கைத்துப்பாக்கி வெடித்ததில் அவரது மகன் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் ஐரிஎன் காரியாலய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு சுதர்மனின் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தபோது வாகனத்தினுள் இருந்த சிறுவன் அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடியபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துப்பகுதியில் காயமடைந்த சிறுவன் பிரத்தியேக வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரியவருகின்றது. இலங்கையின் ஒருதொகுதி ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறத்தல்களை எதிர்கொள்ளும் அதேநேரம் சில ஊடகவியலாளர்களின் தற்பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்கபட்டுள்ளமை இங்கு தெளிவாகின்றது.
0 comments :
Post a Comment