Wednesday, August 25, 2010

சாவேந்திர சில்வா ஐ.நா விற்கான பிரதிநிதியாக நியமனம்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை பிரதி வதிவிடப்பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். பாலியல் குற்றச்சாட்டு ஒன்றின்பேரில் திருப்பி அழைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி வதிவிடப்பிரதிநிதி பந்துள ஜெயசேகரவின் இடத்திற்கு சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தினை உறுதிப்படுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சு , சாவேந்திர சில்வா மிகவிரைவில் கடமையினை பாரமெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

போர்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் மீது குற்றஞ்சுமத்தப்பட்டு அதற்கான விசாரணைகள் தொடர்பாக ஐ.நா வின் செயலாளர் நாயகத்திற்கு அலோசனை வழங்கவென குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் போரை முன்னனெடுத்துச் சென்ற முன்னணி தளபதிகளில் ஒருவரான சாவேந்திர சில்வா ஐ.நா வினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதே நேரம் ஐ.நா விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கோகன திருப்பி அழைக்கப்பட்டு அவ்விடத்திற்கு வடமாகாண ஆழுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வட மாகாண ஆழுநராக கே.பி நியமிக்கப்படலாம் என ஊடகங்கள் ஊகங்களை தெரிவித்துவந்த நிலையில் சந்திரசிறி தொடர்பான செய்தி மேலும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.



No comments:

Post a Comment