மேர்வின் சில்வா வின் அமைச்சுப்பதவி பறிபோனது.
அமைச்சர் மேர்வின் சில்வா பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சுப் பதிவியிலிருந்து ஜனாதிபதி தூக்கியுள்ளதாக லங்காபுவத் தெரிவிக்கின்றது. அத்துடன் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கான அவரது அங்கத்துவமும் ரத்துச் செய்யபட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேர்வின் சில்வாவின் தொடர்சியான சர்ச்சைக்குரிய செயற்பாடுகள் தொடர்பாக பலதடவைகள் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தபோது அவர் அவற்றை பொருட்படுத்தாமல் செயற்பட்டு கடந்தவாரம் சமுர்த்தி உத்தியோகித்தர் ஒவருரை மரத்தில் கட்டிய விடயத்துடன் ஜனாதிபதி இம்முடிவினை எடுத்துள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இம்முடிவு அலறி மாளிகையில் கட்சியின் தலைவர்களுடன் இன்று மாலை இடம்பெற்றபோது அறிவிக்கப்பட்டுள்ளது.
எதுவாயினும் இவ்விடயத்தினை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை என பல இணையங்களும் செய்தித்தாள்களும் தெரிவிக்கின்றன. மேர்வின் சில்வா ஜனாதிபதிக்கு மிக நெருக்கமானவர் குறிப்பிடத்தக்கதாகும். அதேநேரம் எதிர்வரும் நவம்பர் மாதம் அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறவுள்ளது. அதன்போது மேர்வின் சில்வாவிற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்படலாம் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment