பெரியகல்லாறு வடபத்திரகாளியம்மன் ஆடிப்பூர பெருவிழா.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்கு உட்பட வரலாற்று புகழ்மிக்க பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர பெருவிழா இன்று வியாழக்கிழமை காலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வை ஒட்டி இன்று காலை 7.00மணியளவில் பெரியகல்லாறு ஸ்ரீசர்வாத்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து விசேடயாகபூசை இடம்பெற்று அபிசேக பூசையுடன் அடியார்கள் தாங்கள் கொண்டுவந்த பாலினைக்கொண்டு தாங்களே அம்மனுக்கு அபிசேகம் செய்தது இந்த ஆலயத்தின் விசேட தன்மையாக கருதப்படுகின்றது.
அதனைத்தொடர்ந்து விசேட பூசை வழிபாடுகளுடன் ஆலயத்தில் இடம்பெற்ற மகேசுர பூசையுடன் ஆடிப்புற பெருவிழா சிறப்பாக நிறைவுற்றது.
இந்த நிகழ்வில் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment