Thursday, August 5, 2010

இலங்கையில் அவசரகால சட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்வுக்கு வழியேற்படுத்தும் வகையில் இலங்கையில் அவசரகாலச் சட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுதல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அது விடுத்துள்ள அறிக்கையில்.

”அவசர கால நிலைமைகள் இல்லாதபோதும் அவசர கால சட்டம் நாட்டில் அமுலில் இருந்து வருவது இலங்கையர்கள் சட்டத்தை மதிக்காதவர்கள் என்று ஒரு தவறான செய்தியை உலகுக்கு கொடுத்து விடுகின்றது.

இலங்கையில் அரசு-புலிகளுக்கு இடையிலான சிவில் யுத்தம் 1971 இல் ஆரம்பமாகி கடந்த வருடம் மே மாதத்தில் முடிவடைந்தது.பல்லாயிரக் கணக்கானோர் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டனர்.

விசாரணைகள் எவையும் இன்றி ஆயிரக் கணக்கானோர் தடுப்பு முகாம்களில் தொடர்ச்சியாகவும், மிக நீண்ட காலமாகவும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள்,தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு எதிரான அரசியல் ஆயுதமாக அவசர காலச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.”

No comments:

Post a Comment