ஆப்கான். போரில் உலகம் தோற்கிறது: பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மக்களின் உள்ளங்களை கவரத் தவறியுள்ளதால் அங்கு போராளிகளுக்கு எதிரான போரில் உலகம் தோற்றுக்கொண்டு வருகிறது என்று பிரிட்டன் சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் அசிஃப் அலி சர்தாரி கூறியுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனைச் சந்தித்து கடுமையான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் அவர் இந்த எச்சரிக்கையை விடுத் துள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் கருத்துரைத்துள்ளது.
பிரஞ்சு நாளிதழான லெ மாண்ட் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தலிபான் கூட்டணிப் படையினர் நிலைமையைக் குறைத்து மதிப்பிட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அதிபர். அத்துடன் பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்துகொள்ள வில்லை என்றும் கருத்துரைத் துள்ளதாக அந்தப் பத்திரிகைத் தகவல் கூறுகிறது.
இதற்குத் தீர்வு நீண்டகால உதவிகள் தானே தவிர கூடுதல் ராணுவப் படைகள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். “ஆப்கானிஸ்தான் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவர்கள் பொருளியல் வளர்ச்சியை பெறும் வண்ணம் செயல்பட வேண்டும். அவர்களுகடைய வாழ்க்கையில் மற்றங்களை உருவாக்கும் அதே வேளையில் அவர்களின் வாழ்க் கையை மேம்பட வைக்க முடியும் என்றும் நாம் காட்ட வேண்டும்,” என்று திரு சர்தாரி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களைக் கண்டு கொள்வ தில்லை என்று சென்ற வாரம் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ள சூழலில் பிரிட்டன், பாகிஸ்தான் தலைவர் களின் பேச்சுவார்த்தைகள் அமையவுள்ளன.
அத்துடன், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐயில் உள்ள சிலரும் அந்நாட்டு ராணுவத்தில் உள்ள சிலரும் போராளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுபற்றிக் கூறிய பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பாகிஸ்தானும் அதன் மக்களும் பயங்கரவாதி களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றார்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளின் கொடூரமான செயல்களை அமெரிக்காவின் டைம் சஞ்சிகை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அங்கு வீட்டை விட்டு ஓடிய தாகக் கூறப்படும் அயிஷா என்ற பெண்ணின் காதுகள், மூக்கு ஆகியவற்றை உள்ளூர் தலிபான் தளபதியின் உத்தரவிற்கு இணங்க அந்தப் பெண்ணின் மைத்துனர் வெட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment