Sunday, August 15, 2010

இந்தியா, பாக்.கில் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகையால் இந்த நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா ஆலோசனை தெரிவித்துள்ளது.

“தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்ட மிட்டு வருவதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.“ குறிப்பாக அமெரிக்க இலக்குகளையும், அமெரிக்கர்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் குறி வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சொகுசு ஹோட்டல்கள், ரயில்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், திரையரங்குகள், பள்ளிவாசல்கள், உணவகங்களை அவர்கள் குறி வைக்கிறார்கள்.

இந்தியா உள்ளிட்ட மேற்கண்ட வட்டாரடங்களில் லஷ்கர் இ தொய்பா, தலிபான், அல் காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளால் அமெரிக்கர் களுக்கும், அமெரிக்க நலன்களுக்கும் மிரட்டல்கள் தொடருகின்றன என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment