Saturday, August 14, 2010

மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை.

மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதியமைச்சின் செயலாளர் சட்டத்தரணி சுகத கம்லத் தெரிவித்தார். மரண தண்டனை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இது ஒருபோதும் குற்றங்களை குறைத்துவிட உதவப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, நீதிமன்றத்தீர்ப்புகள் சுயாதீனமாக அமைய வேண்டும். இதில் எத்தரப்பினரதும் அழுத்தங்கள் இருக்க முடியாது. நீதித்துறையின் கெளரவம் இதன்மூலம் பாதுகாக்கப்படல் வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com