மேர்வினின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம். நான் மீண்டும் வருவேன் என்கிறார் மேர்வின்.
அமைச்சுப்பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா நான் மீண்டும் பதவியில் அமர்வேன் என தெரிவித்துள்ளார். அமைச்சர் தூக்கியெறியப்பட்டதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் இன்று களினி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அவ்விடத்திற்கு விரைந்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்பான தீர்ப்பிற்காக காத்திருப்பதாகவும் தீர்ப்புகள் எவ்வாறு அமைந்தாலும் தான் பதிவியில் அமர்வேன் எனக்கூறி ஆதரவாளர்களை ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரியுள்ளார்.
0 comments :
Post a Comment