சவுதி அரசை கவிழ்க்கப்போவதாக அல் காய்தா மிரட்டல்
இஸ்லாமுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் சவுதி அரசை கவிழ்க்கப்போவதாக அல் காய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. அல் காய்தா இயக்கத்தின் ஏமன் கிளை இந்த மிரட்டலை விடுத்துள்ளது. அந்த கிளையின் துணை தலைவர் அலி அல் ஷிஹிரி இது தொடர்பாக பேசிய ஒலி நாடா செய்தி இணைய தளம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவுதி அரசில் இடம்பெற்றுள்ள சில உறுப்பினர்கள், தங்களை தொடர்பு கொண்டு, தாங்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பதா அல்லது அல் காய்தா முகாம்களில் சேர ஏமனுக்கு வந்துவிடவா என கேட்பதாக அலி அல் ஷிஹிரி அதில் கூறியுள்ளதாக செய்தி வெளியிடபட்டுள்ளது.
அல் காய்தாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுள்ள போரில், சவுதி அரசுக்கு உள்ள தொடர்பை நிரூபிக்கும் ஆதாரங்களை சவுதி இராணுவத்தில் உள்ள சிலர் தங்களிடம் அளித்துள்ளதாகவும், எனவே சவுதி அரசை கவிழ்ப்பதற்கான பணிகளை தொடங்க இது தொடர்பான மேலும் ஆதாரங்களை மேலும் திரட்டுமாறு தாங்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் ஷிஹிரி அதில் மேலும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment