சீன இராணுவ அதிகாரிகள் வன்னிக்கு ரகசிய பயணம்
சீன இராணுவ அதிகாரிகள் வன்னிப் பகுதிக்கு ரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக இந்திய செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. அங்கு சென்ற அவர்கள் வன்னியில் நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனைகளை நடாத்தியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன இராணுவ அதிகாரிகள் வன்னிக்கு விஜயம் செய்கிறார்கள் என்ற தகவல் வன்னியில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினருக்குக் கூட அறிவிக்கப்படாமல் திடீரென்று ரகசியமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் இரு அதிகாரிகளும் சென்ற வாகன அணிக்கு, ஜனாதிபதி சிறப்பு பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்புக் கொடுத்துக் அழைத்தச்சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வன்னிப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் குடும்பங்களையும், சிங்களக் குடும்பங்களையும் குடியேற்றுவதற்காக கட்டப்படும் வீட்டுத் தொகுதிகளுக்கு சீன அரசாங்கமே உதவி வருகின்றது எனவும் அவ் நடவடிக்கை வேகமாக முன்னெடுக்கப்படுவதாகவும் அச்செய்தி மேலும் கூறுகின்றது.
0 comments :
Post a Comment