புலிகளின் மகளீர் பிரிவு அரசியல் துறைப் பொறுப்பாளருக்கான விளக்க மறியல் நீடிப்பு.
புலிகளியக்கத்தின் அரசியல் துறை எனும் பிரிவின் மகளீர் பிரிவுக்கான பொறுப்பாளராகவிருந்த தமிழினி இறுதிகட்ட யுத்தத்தில் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கபட்டு நீதி மன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். அவர் நேற்று கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழினி என்ற சுப்பிரமணியம் சிவகாமி யை மன்றில் ஆஜர் செய்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவரை தடுத்து வைத்து விசாரணை செய்யும் போது தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்றில் தெரிவித்தனர்,
0 comments :
Post a Comment