இஸ்ரேல் பதில் தாக்குதல்: பாலஸ்தீனத்தில் பதற்றம்.
இஸ்ரேல் மீது காஸா தீவிரவாதிகள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கும் என்ற அச்சத்தில் பாலஸ்தீனத்தில் பதற்றமான நிலை காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
பாலஸ்தீனத்தில் உள்ள காஸா தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் விமானப்படை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகளின் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அதற்கு இதற்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் மீது காஸா தீவிரவாதிகள், ஏவுகணை தாக்குதல் நடத்தினர் எனவும் அச்செய்திகள் கூறுகின்றது.
இந்நிலையில் இஸ்ரேல் எந்த நேரத்திலும் கடுமையான பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், பாலஸ்தீனத்தில் பதற்றமான நிலை இடம்பெயர்வுகளும் இடம்பெறுவதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment