யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் , இந்தியர் ஓமந்தையில் கைது.
யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவம் இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்று முன்தினம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் இடம்பெற்று முடிந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா, சீடு.ராசா உட்பட மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதேநேரம் யாழ் செல்ல முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் ஓமந்தை சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வட மாகாணத்திற்கு செல்வதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுதியினை பெற்றிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment