Sunday, August 1, 2010

புலிகளதும் புலம்பெயர்ந்தவர்களதும் பணம் மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படவேண்டும்.

புலிகளியக்கம் மூர்க்கத்தனமான பயங்கரவாத இயக்கமாக உருவெடுப்பதற்கு தேவையான ஆயுதங்களை விநியோகித்துவந்த கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் இவ்வார சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் புலிகளிடம் உள்ள பணமும் புலம்பெயர் தமிழர்களது பணமும் மக்களுக்களின் வழர்ச்சிக்கு உதவ பயன்படுத்த படவேண்டும் என தெரிவித்துள்ள அவர் தான் எவ்வித சொத்துக்களையும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு தாரைவார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார். நேர்காணலின் முழுவடிவம்.

வத்சலா - அரசாங்கத்துடன் நீர் செய்து செய்து கொண்டுள்ள பரிமாற்றங்கள் எவை?
கே பி – பரிமாற்றமா அதன் அர்த்தம் என்ன? என்ன சொல்கிறீர்கள்?

வத்சலா - அரசாங்கம் உம்மை வைத்து என்ன செய்யபோகிறது. ராஜபக்சவின் குடும்ப ஆட்சியில் நீர் சிக்கியுள்ளீர். நீர் உம்மிடமிருந்த பெருந்தொகை பணத்தை ராஜபக்சவின் உறவினர்களுக்கு பரிமாற்றியுள்ளீர். இதன் காரணமாகவே உம்மை சிறையில் அடைக்காமல் சுதந்திரமாக வைத்திருக்கிறார்கள்?

கே பி - சிரிப்பு –அவ்வாறான பரிமாற்றம் எதுவும் கிடையாது. 2003 ஆம் ஆண்டுக்காலப்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருந்த பொறுப்புகளில் இருந்து நான் விலகிக்கொண்டேன். அதன் பின்னர் நான் பெருந்தொகை பணத்தை என்வசம் கொண்டிருக்கவில்லை. அவையாவும் வீணான பிரசாரங்களாகும். எனக்கு இந்த விடயம் தொடர்பாக எதுவும் தெரியாது.

வத்சலா - கப்பல்கள் பற்றி என்ன கூறுகிறீர்? நீர்தான் அவற்றுக்கு பொறுப்பாக இருந்தீர். கப்பல்களுக்கு என்ன நடந்தது? எந்த சகோதரருக்காக அதனை கொடுத்தீர்?

கே.பி – பல கப்பல்கள் இறுதியுத்தத்தின் போது அழிக்கப்பட்டன. அங்கு கொடுப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை.

வத்சலா - கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்படவில்லை. உமக்கு அது பற்றி தெரிந்திருக்கும்தானே?

கே.பி - இரண்டு மூன்று கப்பல்கள் எஞ்சியிருந்தன. சில வேளைகளில் அரசாங்கம் அவற்றை கைப்பற்றியிருக்கலாம்.

வத்சலா – எங்கு வைத்து கைது செய்யப்பட்டீர்?

கே பி – மலேசியாவில்

வத்சலா - தாய்லாந்தில் என்ன நடந்தது?

கே.பி - தாய்லாந்து தொடர்பாக கூறப்பட்டவை ஊகங்களாக இருக்கலாம். ஆனால் நான் மலேசியாவிலேயே பிடிக்கப்பட்டேன்.

வத்சலா – உம்மை யார் பிடித்தது?

கே பி – மலேசிய புலனாய்வாளர்கள். என்னை விமான நிலையம் வரை அழைத்துச்சென்று அங்கு இலங்கையின் புலனாய்வாளர்களிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் விமானத்தின் வர்த்தக வகுப்பில் அமரசெய்யப்பட்டு நான் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டேன்.

வத்சலா - என்ன நிபந்தனைகளுக்கு கீழ் நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்? தற்போது என்ன நினைக்கின்றீர்?

கே பி – வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். நான் ஏனைய கைதிகள் எண்ணுவதை போலவே உணர்வுகளை கொண்டுள்ளேன். எனினும் நான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வீடு எங்குள்ளது என்பது எனக்கு தெரியாது.

வத்சலா – உம்மை சமாதானத்துக்கு உதவுமாறு அரசாங்கம் அழைத்ததா?

கே பி – நாங்கள் அதனை பற்றி பேசினோம். நான் எனது மக்களுக்கு உதவவேண்டும். கஸ்டப்படுகின்ற மக்களுக்கு உதவவேண்டும் என நினைக்கிறேன்.

வத்சலா - யுத்தத்தின் இறுதிக்காலத்தில் உமது பணி என்னவாக இருந்தது?

கே பி –நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் உட்பட பல தரப்புகளுடனும் பேசினோம். எனினும் அது முடியவில்லை

வத்சலா - புலிகளியக்கத்தில் உமது பொறுப்புகள் எவை? ஆயுதக்கடத்தலா? அல்லது வங்கி வைப்புகளின் பொறுப்பாளரா?

கே பி – நான் சர்வதேச உறவுகளுக்கு பொறுப்பாக இருந்தேன். நான் சமாதான முயற்சியாளராக செயற்பட்டேன்.

வத்சலா - உம்மிடம் அதிகளவு பணம் இருந்தது உண்மையா?

கே பி – 2003 ஆம் ஆண்டில் 2009 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உள்ள நிலைமை எனக்கு தெரியாது. நான் 2003 ஆம் ஆண்டு எனது பொறுப்பை முடித்துக்கொண்டபோது கடன்களும் இருந்தன.

வத்சலா - இலங்கைக்கு எப்போது கடைசியாக விஜயம் செய்தீர்?

கே பி – ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ சமாதான முன்னெடுப்புகளை மேற்கொண்டபோது கடைசியாக இலங்கைக்கு வந்தேன்

வத்சலா - மலேசியாவில் இருந்து இலங்கை வந்தபின்னர்மட்டக்களப்புக்கு போயிருக்கிறீரா?

கே பி - இல்லை. வன்னிக்கு சென்றிருந்தேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் இலங்கைக்கு வந்து அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொள்ள பயணித்த போது நானும் அவர்களுடன் வன்னிக்கு சென்றேன்.

வத்சலா - உமது பழைய யுத்த களத்திற்கு சென்ற போது கவலையடைந்தீரா?

கே பி – முகாம்களுக்கு விஜயம் செய்தபோது போரின் காரணமாக பொதுமக்கள் அவலப்படுவதை கண்டு வருந்தினேன். எனக்கு அழுகை வந்தது. இந்தநிலையில் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன்.

வத்சலா - நீர் அரசாங்கத்துக்கு பணம் எதனையும் கொடுக்கவில்லையா?

கே பி – நான் சொல்வது உண்மையாகும். பணம் வழங்கியதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான செய்தியாகும். புலம் பெயர் தமிழர் இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.

வத்சலா – உமக்கு எத்தனை வயது ? குடும்பம் பிள்ளைகள்?

கே பி – எனது மனைவி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவள். 18 வயது மகள் இருக்கிறாள்.

வத்சலா - அவர்கள் உங்களுடன் நாளாந்தம் தொலைபேசியில் அல்லது ஸ்கைப்பில் பேசுகிறார்களா? அவர்கள் உங்களை பார்ப்பதற்கு வருகிறார்களா?

கே பி – ஒவ்வொரு நாளும் பேசுவதில்லை. வாரத்திலட இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவர்களுடன் கதைப்பேன். அவர்கள் என்னை பார்க்க வரலாம்.

வத்சலா - புலம்பெயர்ந்தவர்களின் குழுவுடன் நீர் எங்காவது சென்றீரா?

கே பி – வன்னிக்கு சென்றோம். அபிவிருத்தி தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து சேவையாற்றுவது குறித்து ஆராய்தோம்

வத்சலா – முடிவடைந்த யுத்தத்தைப் பற்றி என்ன உணர்கின்றீர் ?

கே பி – நாங்கள் கசப்பான அனுபவத்தை பெற்றிருக்கிறோம்.

வத்சலா – கே.பி நீர் கிளிநொச்சி பிரதேசத்திற்கு மீண்டும் விஜயம் செய்தபோது புலிகளியக்கத்தினால் மில்லியன் கணக்கான டொலர்களுக்கு ஆயுதங்களை வாங்கி மேற்கொண்ட யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய முடிந்துள்ளதாக உணர்ந்தீரா? அழிவுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான தொடர்பான உனது உணர்வுகள் எவ்வாறிருந்தது?

கே.பி – அபிவிருத்தி முதலிலிருந்து ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும். அதற்கு புலிகளதும் புலம்பெயர் தமிழர்களதும் பணம் இங்கு வரவேண்டும் என நான் கருதுகின்றேன்.

வத்சலா - சர்வதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் என்ன?

கே பி – அவர்களில் எவருமே உண்மை பேசுகின்றார்கள் இல்லை. பலர் பிரபா இன்னும் உயிருடன் இருப்பதாகவும் இன்னும் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இவையெல்லாம் சாத்தியமல்லாத விடயங்கள். நான் முகாம்களுக்கு சென்றபோது அங்கு உள்ள இளைஞர்களும் யுவதிகளும் தாம் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவேண்டும் என கூறுகின்றனர். ஒரு சதவீதத்தினரே மீண்டும் யுத்தம் செய்யவேண்டும் என கூறுகின்றனர்

வத்சலா - தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் இலங்கையில் தோற்றம் பெறுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா?

கே பி – உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. எங்களது வாழ்நாளில் அவ்வாறு நடக்கும் என நாம் நம்பவில்லை. 35 வருட யுத்தத்தில் சிக்குண்டுண்டிருந்த நாம் இனி சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்கவேண்டும்

வத்சலா -உங்களது கைது பற்றி ஏதாவது அறிந்திருந்தீர்களா?

கே பி - இல்லை. ஆச்சரியமாக நடந்தது. ஹோட்டலுக்கு மலேசிய புலனாய்வாளர்கள் வரும் வரை எனக்கு எதுவும் தெரியாது

வத்சலா - அரசியலுக்கு வரும் நோக்கம் இருக்கிறதா?

வத்சலா - இல்லை. எனது மக்களின் பிரச்சினைகள் தீரும் வரை அவ்வாறான எண்ணம் இல்லை. நான் விடுதலையை விரும்புகிறேன். எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com