600 டன் வெடிமருந்துகளுடன் சென்ற லாரிகள் மாயம். நக்சலைட்டுக்ளிடம் சிக்கியதா?
இந்திய ராஜஸ்தானலிருந்து மத்திய பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 600 டன் வெடிமருந்துகளுடன் கூடிய 61 லாரிகள் மாயமாகி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானின் தோல்பூர் என்ற இடத்தில் உள்ள ஆர்இசிஎல் என்ற தொழிற்சாலையிலிருந்து 61 லாரிகளில், மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் 'கணேஷ் மேகசின்' என்ற தோட்டா தயாரிப்பு தொழிற்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த லாரிகள் கடந்த 4 தினங்களுக்கு முன்பே மத்தியபிரதேசத்திலுள்ள குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அந்த லாரிகள் இன்னும் வராமல் மர்மமான முறையில் மாயமாகி விட்டதாக சாகர் மாவட்ட காவல்துறை ஐஜி அன்வேஷ் மங்களம் இன்று தெரிவித்துள்ளார்.
லாரிகளுடன் காணாமல் போய் இருக்கும் வெடிமருந்துகளின் மதிப்பு ரூ.1.30 கோடி என்றும், தவறானவர்களின் கைகளில் இது சிக்கியிருக்கக்கூடும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே காணாமல்போய் இருக்கும் வெடிமருந்து லாரிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் 4 தனிப்படை அமைத்துள்ளதாகவும், அவர்கள் ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ராவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் உமா சங்கர் குப்தா தெரிவித்துள்ளார்.
இவ்வெடிமருந்து லாரிகளை நக்சலைட்டுகள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment