Sunday, August 8, 2010

6 கிலோகிராம் கெரோயின் போதைப்பொருளுடன் பாக்கிஸ்தானீ கைது.

6 கிலோகிராம் கெரோயின் போதைப்பொருளுடன் நாட்டினுள் நுழைய முன்றபட்ட பாக்கிஸ்தானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 20 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளை வாகன உதிரிப்பாகங்களினுள் துல்லியமாக திணித்து , சுங்க இலாகா மற்றும் விமானநிலையப் பாதுகாப்பு பிரிவினரின் கண்களில் மண்ணைத்தூவி வெளியேறியபோதும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் விமான நிலைய வெளிவாசலில் வைத்து கைது செய்துள்ளனர்.

65 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான இவர் மூன்றாவதுமுறையாக தனது பயணத்தை மேற்கொண்டிருந்தபோது மாட்டிக்கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com