கல்கிசையில் ரி-56 துப்பாக்கி மீட்பு.
கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கல்கிசையில் உள்ள கால்வாய் ஒன்றில் மிகவும் பாதுகாப்பான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடற்படையினர் இக்கால்வாயை துப்புரவாக்கும் பணியில் கடந்த 30 ஆம் திகதி ஈடுபட்டிருக்கின்றனர். அப்போதே இந்த ரி.56 ரக துப்பாக்கியை வெற்றுத் தோட்டாவுடன் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
நீரில் பழுதடையாமல் இருக்கும் வகையில் கிறீஸ் பூசப்பட்டு, பொலித்தீனால் மிகவும் பாதுகாப்பான முறையில் மூடப்பட்டிருக்கின்றன.
0 comments :
Post a Comment