45 நாட்களுக்குள் கண்ணி வெடிகள் அகற்றப்படுமாம்.
யாழ்.குடாநாட்டில் இன்னும் 45 நாட்களுக்குள் அனைத்து நிலக்கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டு விடும் என்று யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்க தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் மிகவும் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தின் அநேக இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டன. தனங்கிளப்புப் பகுதியிலும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு விட்டன. இன்னும் 699 குடும்பங்களே யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அவர்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் ரயில் பாதையோடு இணைந்ததாகப் புதைக்கப்பட்டிருக்கும் நிலக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன. அவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் ரயில் பாதையைத் திருத்தும் வேலைகளை ஆரம்பிக்க முடியும். இராணுவத்தினர் ஏனைய மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்து நிலக்கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என்றார்.
...............................
0 comments :
Post a Comment