30 வருடமாக மூடப்பட்டிருந்த ஐந்து வீதிகளை திறக்க அனுமதி
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஐந்து முக்கிய வீதிகள் பொது மக்களின் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளன. இதற்கான அனுமதியை படைத்தரப்பினர் வழங்கியுள்ளனர். 1990ம் ஆண்டு முதல் 30 வருட காலமாக மூடப்பட்டிருந்த 5 முக்கிய வீதிகளும் திறக்கப்பட்டதும் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் 300 தமிழ்க் குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு வருவார்கள் என செங்கலடி பிரதேச செயலாளர் திருமதி தினேஷ் தெரிவித்தார்.
ஏறாவூர் செங்கலடி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள ஏழு உள்ளக வீதிகள் 1990ம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டன. தற்போது மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் போக்குவரத்துக்கும், குடியமர்வுக்கும் உகந்த பகுதி என 5 வீதிகளை குறிப்பிட்டு இராணுவத்தின் பொறியியலாளர் பிரிவு சான்றிதழ் வழங்கியுள்ளது. இவ் வீதிகளைத் திறப்பது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு அண்மையில் செங்கலடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மூடப்பட்ட ஏழு வீதிகளைத் திறப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. இப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள மிதி வெடிகளை அகற்றிய பின்னர் குறித்த வீதிகளைத் திறப்பது குறித்து அறிவிக்கப்படுமென இணக்கம் காணப்பட்டது.
0 comments :
Post a Comment