Thursday, August 5, 2010

சரத் பொன்சேகாவிற்கு எதிராக 21 குற்றச் சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல்.

முன்னாள் இராணுவத் தளபதியும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் 21 குற்றச்சாற்றுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'ஹை கோப்' ஆயுத ஊழல் சம்பந்தமாக பொன்சேகாவிடம் இந்தக்குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.

வழக்கின் முதலாவது பிரதிவாதியான பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ன ஆஜராகாத நிலையிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை இந்த வழக்கின் பிரதிவாதியான ஹை கோப் நிறுவனத்தின் பணிப்பாளரான வெலிங்டன் டே கொட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றச்சாற்றுக்கள் தொடர்பான விசாரணையை, நீதிபதி சுனில் ராஜபக்ச வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இறுதியுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு படையினருக்கு அரசாங்கம் உத்தரவிட்டதாக பொன்சேகா ஆங்கில நாளேட்டிற்கு தெரிவித்ததாக கூறப்பட்ட தகவலுக்கு எதிரான வழக்கிலும், பொன்சேகாவுக்கு கடந்த 29 ஆம் தேதி குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com