பிரபா கணேஷனுக்கு மனோ 14 காலக்கெடு. முடிவில் மாற்றமில்லை என்கிறார் பிரபா.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு கொழும்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பிரபா கணேஷன் அண்மையில் அரசுடன் இணைந்து கொண்டார். அவர் 14 நாட்களுள் அரசிலிருந்து விலகி எதிர்கட்சியில் உட்காரவேண்டும் என அவரது சகோதரனும் கட்சியின் தலைவருமான மனோ கணேஷன் காலக்கெடுவிதித்துள்ளார்.
இது தொடர்பாக கட்சி பிரபாவுக்கு கடிதமூலம் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ள மனோ கணேஷன் , இவரது இக்கட்சி மாற்றம் கட்சியின் சட்ட திட்டங்களை மீறியது எனவும் இவர் மீது ஒழுக்கா ற்று நடவடிக்கையினை எடுப்பதற்கு கட்சியின் யாப்பு தனக்கு வழங்கியுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் விசார ணைக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் தான் தனக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரபாகணேஷன் , தனது சகோதரன் மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குமாறு கேட்டிருந்தாகவும் ஆனால் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினுள் நிலவும் பதவிப் போட்டிகளின் அடிப்படையில் அது சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார்,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு தற்போது 3-4 பேர் போட்டி கொண்டிருக்கும் போது தான் தனது முடிவில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளப்போவதில்லை என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment