மற்றவர்களின் செல்போனை ஒட்டுக்கேட்டால் ரூ.1 கோடி அபராதம்- ஜெயில்:
செல்போன்களில் பேசப்படும் பேச்சு, மின்காந்த அலைகளாக காற்றில் பரவிச்செல்கிறது. இந்த மின்காந்த அலைகளை, அதற்குரிய நவீன கருவிகளை கொண்டு யார் வேண்டுமானாலும், எந்த ஒரு செல்போனின் பேச்சையும் ஒட்டு கேட்க முடியும். இதற்கு தேவையான வெளிநாட்டு கருவிகள், இந்தியாவில் சாதாரணமாக கள்ள மார்க்கெட்டில் கிடைக்கிறது.
இதை பயன்படுத்தி சமீபத்தில் இந்திய அரசியல் தலைவர்களின் டெலிபோன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில், மற்றவர்களின் செல்போன் பேச்சை ஒட்டுக்கேட்டால், ரூ.1 கோடி அபராதமும், ஜெயில் தண்டனையும் விதிக்க, டெலிகிராப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.
0 comments :
Post a Comment