Tuesday, July 27, 2010

அமெரிக்க கடற்படை ஒத்திகையால் ஆசியாவில் பதட்டத்தை அதிகரிக்கின்றது. By John Chan

அமெரிக்க - தென் கொரிய கடற்படைகளின் பிரமாண்டமான கூட்டு ஒத்திகை வட கொரியா அருகே ஜப்பான் கடலில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. வடகிழக்கு ஆசியாவின் மிகவும் ஆபத்தான போர்அபாயம் உள்ள பகுதி என கடந்த அரை நூற்றாண்டு காலமாக கருதப்பட்டு வந்த பகுதியில் தற்போது பதட்டம் அதிகரித்துள்ளது. இந்த கடற்படை ஒத்திகைக்கு வடகொரியாவும் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

"வெல்லமுடியாத புத்துணர்வு" (Invincible Spirit) என பெயர்சூட்டப்பட்டுள்ள இந்த போர் ஒத்திகையானது தென்கொரியாவின் போர்க்கப்பலை மூழ்கடித்ததாக கூறப்படும் வடகொரியாவை இலக்கு வைத்துக்கொண்டு நடத்தப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் தென்கொரியாவின் சியோனான் என்னும் போர்க்கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டு 46 தென்கொரிய கடற்படையினர் பலியானதற்கு வடகொரியாவே காரணம் என விசாரணைக்குப் பிறகு தென்கொரியா குற்றம் சாட்டப்பட்டியுள்ள நிலையில் தென்கொரியாவும் அமெரிக்காவும். வடகொரியாவை பழிவாங்க வழிதேடி வருகிறது. இதில் எந்தவித தொடர்புமில்லை என ப்யோங்யாங் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஒத்திகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் சுமார் 20 போர்க்கப்பல்கள், அணுஆயுத சக்தி படைத்த யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வாஷிங்டன் என்னும் விமானம்தாங்கி கப்பல், அதி நவீன எப்-22 ரக போர்விமானங்ள் உட்பட 200 விமானங்கள் மற்றும் 8000 படையினர் பங்கேற்கின்றனர். இஇராணுவ ஆற்றலைக் காட்டுவதற்கான இந்த பிரமாண்டமான கூட்டு ஒத்திகை வடகொரியாவின் கடற்படையிடமிருந்து ஏதேனும் மிரட்டல் இருந்திருந்தால் கூட அதை சந்திப்பதற்கு தேவையானதைவிட பல மடங்கு அதிக அளவிலானது. இந்த கூட்டு ஒத்திகை "கண்மூடித்தனமான ஆத்திரமூட்டல்" ஆகும் என பியோங்யாங் கண்டித்துள்ளது.

கொரியதீபகற்பத்தின் மேற்கே சீனா அருகே மஞ்சக்கடலில் இந்த ஒத்திகை நடைபெறவிருப்பதாக தென்கொரிய ஊடகங்கள் முதலில் செய்தி வெளியிட்டது. தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்நடவடிக்கைக்கு பெய்ஜிங் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் சென்றவாரம் இது குறித்து அறிவிக்கையில்: "சீனாவின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மஞ்சக்கடலில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையையும் நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்" என்றார்.

"வெல்லமுடியாத புத்துணர்வு" ஒத்திகையில் தங்களது நாட்டிலிருந்து நான்கு கண்காணிப்பாளர்கள் பங்கேற்பர் என அறிவித்துக்கொண்டு ஜப்பானும் இந்த சர்ச்சையில் தலையிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜோர்ஜ் வாஷிங்டன் விமானம்தாங்கி கப்பலில் ஜப்பான் நாட்டு கண்காணிப்பாளர்கள் இருப்பர். கடந்த 1895 முதல் 1945 வரையிலும் கொரியாவில் மூர்க்கத்தனமான காலனித்துவ ஆட்சி புரிந்த ஜப்பான் அமெரிக்க - தென்கொரிய கூட்டு இராணுவ ஒத்திகையில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

ஆத்திரமூட்டுதலை மேலும் ஊக்குவிக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரையில் மேலும் வேறு ஒரு அமெரிக்க - தென்கொரிய கூட்டு இஇராணுவ ஒத்திகை இதுவரையில் அறிவிக்கப்படாத ஒரு இடத்தில் நடத்தவிருப்பதாக அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகள் கட்டளையகம் வடகொரியாவிற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜூலை 13-ஆம் தேதியன்று China Dailyயின் தலையங்கத்தில் "அணுசக்தியில் இயங்கும் யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வாஷிங்டன் விமானம்தாங்கிக்கப்பலையும் இந்த ஒத்திகையில் உட்படுத்த அமெரிக்கா முடிவெடுக்கும் பட்சத்தில் சீன பொதுமக்களின் எதிர்ப்பு மேலும் கடுமையாக இருக்கும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. போர்ரீதியாக இந்த கப்பலால் தாக்குதல் நடத்தக்கூடிய அதிகபட்ச தூர இலக்கு என்பது சீனாவின் கிழக்கு கடற்கரை வரையிலும் எட்டக்கூடியது என்பதால் இந்நடவடிக்கைகள் சீனாவின் வாசல்படிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் ஆத்திரமூட்டல் அல்லாமல் வேறு ஏதும் அல்ல.

People's Dailyயில் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் சீன இராணுவ ஜெனரல் லுவோ யுவான் "சீனாவின் இடத்தில் அமெரிக்கா இருந்திருந்தால், அந்நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் இராணுவ ஒத்திகை நடத்த சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்குமா?" என ஆச்சரியத்துடன் கேள்வியை எழுப்பினார். போர் திட்டங்கள் பற்றிய முதல்கட்ட சோதனைகளும், போர்வியூக கண்காணிப்பு நடவடிக்கைகளும் சீனாவுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளே ஆகும்.

ஜூன் 3-ஆம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரையில் ஏராளமான போர்விமானங்களை பயன்படுத்திக்கொண்டு கொரியதீபகற்பத்தின் தெற்கே சீனக்கடலின் கிழக்குப்பகுதியில் சீனா உண்மையான சூடுகளுடன் இஇராணுவ ஒத்திகை நடத்தியிருந்தது. தென்கொரியாவுடன் இணைந்து நடத்தப்படவிருக்கும் இராணுவ ஒத்திகை குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா அறிவித்த அதே சமயத்தில், சீனாவின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பில் மஞ்சக்கடலில் நடத்தப்பட்ட சமீபத்திய ஒத்திகைகளின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. நீர்மூழ்கிக்கப்பலிலிருந்து தொலைதூர ஏவுகணையை ஏவும் காட்சிகளை காண்பித்த அதே நேரத்தில், அதிக தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்குவதே இந்த ஒத்திகைகளின் நோக்கம் ஆகும் என குறிப்பிடப்பட்டது.

இந்நடவடிக்கைகளையெல்லாம் நியாயப்படுத்துவதற்கும் அப்பால், அமெரிக்க - தென்கொரிய இஇராணுவங்களின் மேலும் கூட்டு ஒத்திகைகள் இந்த ஆண்டு நடைபெறவிருப்பதாகவும், அப்போது சீனாவின் எதிர்ப்புக்களை புறக்கணித்துக்கொண்டு மஞ்சக்கடலிலும் ஒத்திகை நடத்தப்போவதாகவும் வெள்ளைமாளிகை பேச்சாளர் பீ.ஜே. குரோவ்லி சென்ற வாரம் அறிவித்தார். "அவர்கள் (சீனர்கள்) அப்பகுதியில் ஆற்றல் படைத்தவர்கள் தான்... நிச்சயம் அவர்களது அபிப்பிராயங்களும் பரிந்துரைகளும் மரியாதையுடன் பரிசீலனை செய்யப்படும்" என்றார் அவர். ஆனால் இது சர்வதேச கடற்பகுதிகளில் ஒத்திகை நடத்துவது எங்களது ஆற்றலைப் பொறுத்த விஷயம் ஆகும். அதை தீர்மானிப்பது நாங்கள் தான்... நாங்கள் மட்டும் தான்.

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை தென்கொரியாவில் அந்நாட்டு பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். கடற்படைகளின் கூட்டு ஒத்திகை பற்றி அறிவித்ததோடு, கேட்ஸ் மற்றும் ஹில்லாரி ஆகிய இருவரும் தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான இஇராணுவமயமற்ற மண்டலத்தையும் பார்வையிட்டனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கைக்கு பொறுப்பான, (பதவிபெற்ற) இரு அமெரிக்க மந்திரிசபை உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இஇராணுவமயமற்ற மண்டலத்தை பார்வையிட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி அட்மிரல் மைக்கேல் முள்ளன் சியோல் நகருக்குச் சென்று தென்கொரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க - தென்கொரிய இணைந்த இஇராணுவ கூட்டிற்கு 2015-ஆம் ஆண்டு வரையிலும் அமெரிக்க இஇராணுவ படைத்தலைவர்களே தலைமை தாங்குவர். இதற்கு முன்பு, இஇராணுவ அதிகாரங்களை வரும் 2012-ஆம் ஆண்டிலேயே தென்கொரியாவிடம் ஒப்படைக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் எவ்வளவு உறுதியாக உள்ளோம் என்பதை வடகொரியாவுக்கும், அந்த பிராந்தியத்திற்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் தெளிவுபடுத்துவதற்காகவே தாம் தென்கொரியா வருகை தந்துள்ளதாக ராபர்ட் கேட்ஸ் அறிவித்தார். சீனாவின் பெயரை குறிப்பிடாமலேயே அவர் இவ்வாறு மேலும் கூறினார்: உண்மையிலேயே வலிந்துதாக்குதல் நடத்தக்கூடிய எதிரியை சந்திக்கும் வகையில் நம் இஇராணுவ தோழமை தற்போது எப்போதையும்விட உறுதியாக உள்ளது. மஞ்சக்கடலில் நடத்தப்படவிருக்கும் கூட்டு ஒத்திகைகள் பற்றியும் இந்த தருணத்தில் அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.

வடகொரியா மீது ஹிலாரி கிளிண்டன் புதிய தடைகளை அறிவித்தார். இது தொடர்பாக மேலும் விபரங்களை குறிப்பிடாமலேயே, வெளிநாடுகளில் உள்ள வடகொரியாவின் சொத்துக்களை முடக்கி வைக்கப்போவதாகவும், சர்வதேச வங்கிகளுடனான ப்யாங்யாங்கின் இடர்பாடுகளை தடுக்கும் வகையிலும் இந்த தடைகள் அமைந்துள்ளதாக கூறினார். அமெரிக்கா தென்கொரியாவுக்கு "மிகுந்த பாதுகாப்பு" அளிக்கப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

தென்கொரியாவின் செயோனான் போர்க்கப்பல் மூழ்கடித்ததற்காக வடகொரியா மீது கண்டனம் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் பேரவை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தது தான் கொரியாவில் அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதற்கான காரணம். கப்பலை மூழ்கடித்தது வடகொரியா தான் என்ற தென்கொரிய விசாரணையின் முடிவை சீனா ஏற்காமல் போனதும் அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டும் வகையில் அமைந்தது. அதே போன்று வடகொரியாவுக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளும் ஐ.நா. நடவடிக்கைக்கும் சீனாவின் ஆதரவு கிடைத்ததில்லை. இந்த நிலையில் வடகொரியாவின் பெயர் குறிப்பிடாமலேயே, தென்கொரிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டித்துக் கொண்டு ஜூலை முதல்வாரத்தில் முக்கிய அறிக்கை ஒன்றை ஐ.நா வெளியிட்டது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பதட்டத்தின் அடையாளமாக , அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜூன் மாதம் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின்போது சீன அதிபர் ஹூ ஜின்டவொ மீது "வடகொரியாவின் தூண்டுதல் நடவடிக்கைகளை சீனா வேண்டுமென்றே கவனிக்காமல் இருக்கிறது" என்று கூறி தாக்குதல் நடத்தினார். கொரிய தீபகற்பத்தின் நிலைமை குறித்த சீனாவின் கவலையை அறியும் முயற்சியில் உள்விழித்து்ககொண்டு ஒபாமா "ப்யோங்யாங் எவ்வாறு கோட்டை மீறிக்கொண்டிருக்கிறது என்பது பற்றி நாம் அனைவரும் சற்று தீவிரமாகவே பேச வேண்டியுள்ளதை அதிப்ர ஹூ ஜின்டவொ புரிந்து கொள்வார் என நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வடகொரியா தொடர்பான கருத்துவேறுபாடுகளானது, ஆசியாவிலும், சர்வதேச அளவிலும் அவ்விரு நாடுகளுக்கிடையேயான பரந்த கருத்து வேறுபாடுகளின் ஒரு அம்சம் மட்டுமே ஆகும். சீனாவின் பொருளாதார வளர்ச்சியும், வடகிழக்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க தோழமை நாடுகளான ஜப்பான், தென்கொரியா மற்றும் தைவான் போன்றவை சீனாவுடனான வர்த்தகத்தை நம்பியிருக்கும் நாடுகளாக உள்ளதும் அமெரிக்காவுக்கு கவலை அளிக்கிறது. இந்த சூழலில் அமெரிக்கா தனது இராணுவ ஆற்றலை காட்டுவதன் நோக்கம் தங்களது இராணுவ பலத்தில் தங்கியிருக்க வேண்டியதும் அந்த நாடுகளுக்கு மிக முக்கியாமானதே என்று நினைவுபடுத்தவும் கூடத்தான்

வியட்நாமில் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (ASEAN) மண்டல கூட்டத்தின்போதும் இந்த உராய்வுகள் அனைத்தும் வெளிப்படையாக இருந்தது. ஆசியாவில் கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வரும் ஹிலாரி கிளிண்டன் ஆசியான் கூட்டத்தின்போது கூறியதாவது: அமெரிக்காவின் எதிர்காலமானது ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஒரு பசிபிக் நாடு என்பதால் நாங்கள் ஆசியான் அமைப்பின் சுறுசுறுப்பான அங்கத்துவ நாடாகவே உங்களுடன் இருக்கத் தான் செய்யும்" என்றார். கிளக்குஆசியான்(ஆசியான் + சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா) மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது வாஷிங்டனுக்கு இராஜதந்திர ரீதியாக கிடைத்துள்ள சிறியதோர் வெற்றியே ஆகும்.

செயோனன் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு வடகொரியாவை கண்டிக்க வேண்டும் எனக் கோரிய கிளிண்டன், ப்யாங்யாங் ஆத்திரமூட்டும், ஆபத்தான வகையில் நடந்துகொள்வதாகவும் அறிவித்தார். இந்த வார்த்தைகள் அனைத்தும் அப்பகுதியில் அமெரிக்கா கடைப்பிடித்து வரும் கொள்கைகளுக்கும் பொருந்தும் வார்த்தைகளே ஆகும். ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்த வரையில் அமெரிக்காவின் அழுத்தங்கள் ஒன்றும் சீனாவின் எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு போதுமானதாக இருக்காததோடு, ஆசியான் அறிக்கையும் இத்துடன் ஒப்பிடும்போது மென்மையானதாகவே இருந்துள்ளது.

வியட்நாம் தலைநகர் ஹானோயில் நடைபெற்ற கூட்டத்தின்போது வடகொரிய பிரதிநிதி ரி-டோங்-இல் நடைபெறவிருக்கும் கூட்டு இராணுவ ஒத்திகையை கடுமையாக கண்டித்தார். "அத்தகைய நடவடிக்கை கொரியதீபகற்பத்தின் அமைதி நிலைக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிப்பது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த மண்டலத்திற்கும் அச்சுறுத்துல் ஆகும்" என்றார் அவர். மேலும் இதற்கு "தகுந்த பதிலடி" கொடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

"கொரிய தீபகற்பத்திலிருந்து அணு ஆயுதங்களை ஒழிப்பதில் அமெரிக்கா நிஜமாகவே விரும்புவதாக இருந்தால் இந்த இராணுவ ஒத்திகையை ரத்து செய்வதுடன், பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புக்களை கெடுக்கும் வகையிலான தடைகளையும் வாபஸ் பெற வேண்டும்" என்றார் அவர்.

பல்வேறு விஷயங்களில் சீனா மீது அழுத்தம் செலுத்த கிளிண்டன் இந்த மேடையை பயன்படுத்தியுள்ளார். சீனாவின் தோழமை நாடான மியான்மரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பாய்ச்சல் மற்றும் மூலோபாயரீதியாக மிகமுக்கியம் என சீனா கருதும் தெற்கு சீனா கடல் வழியாக தடையற்ற போக்குவரத்து அனுமதிக்க வேண்டுமென்றும் அவர் அழுத்தம் செலுத்தினார். சீனாவிலிருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், ஆபிரிக்காவுக்குமான எண்ணெய் சரக்கு போக்குவரத்து பெரும்பாலும் இந்த கடற்பகுதி வழியாகத் தான் நடைபெற்று வருகின்றது.

தெற்கு சீனா கடற்பகுதி தொடர்பான சர்ச்சையில் அமெரிக்கா தலையிடுவதே குறிப்பாக ஆத்திரமூட்டுதல் ஆகும். கடலுக்கடியில் எண்ணெய் வளம் மறைந்து கிடப்பதோடு மூலோபாயரீதியாக மிகமுக்கியமான பல்வேறு குட்டித்தீவுகள் மற்றும் கடல்பாறைகள் மீது சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. வியட்நாமை சீனாவுக்கு எதிராக நகர்த்திச்செல்லும் நோக்கத்துடன், இந்த விவாதத்திற்கு சர்வதேச ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று கிளிண்டன் வலியுறுத்தினார். இது குறித்து நியூயார்க் டைம்ஸ் "இந்த நிலைப்பாடு அப்பகுதியில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், நடைமுறையில் அது சீனாவை உரத்த குரலில் கண்டிப்பதற்கு சமம் ஆகும்" என்று கருத்து வெளியிட்டுள்ளது:

டைம்ஸ் இன் கருத்து இவ்வாறு தொடர்கிறது: அமெரிக்க - தென்கொரிய கடற்படைகளின் கூட்டு ஒத்திகை இந்த வாரம் தொடங்கவிருப்பதால் ஏற்கெனவே கோபமடைந்துள்ள சூழலில், இந்த பிரச்சனையில் தலையிடுவததென்ற நிர்வாகத்தின் முடிவு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் ஜியெச்சியை பெருமளவில் கோபப்படுத்தியுள்ளது. பாதுகாப்புக்கூட்டத்தில் பங்கேற்ற 27 நாடுகளில் 12 நாடுகள் தெற்கு சீனக்கடல் பிரச்சனை மீதான புதிய அணுகுமுறைக்கு ஆதரவாக பேசியதால், அமெரிக்காவின் முயற்சி செயற்கையானது என யாங் ஜியெச்சி உணர்ந்துள்ளார்.

இந்தோனேசியாவின் உள்நாட்டு மற்றும் பிரிவினை இயக்கங்களை ஒடுக்குவதற்காக செயல்பட்டு வரும் கொபாசுஸ் (Kopassus) சிறப்பு படையுடன் இராணுவ உறவுகளை மீண்டும் தொடங்கவிருப்பதாக ஆசியான் மாநாட்டின் முதல் நாளன்று ஒபாமா அரசாங்கம் அறிவித்தது. இந்தோனேசியா ஒரு ஜனநாயக நாடாக மாறியுள்ள நிலையில் அந்த படை மீதான தடையை தொடர வேண்டியதி்ல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே சமயம் வாஷிங்டன் போஸ்ட் இதற்கு வேறு ஒரு காரணத்தை சுட்டிக்காட்டுகிறது, ஏராளமான படுகொலைகள் மற்றும் வன்முறைகளை நிகழ்த்தியுள்ளதாக வரலாறு படைத்த இந்தோனேசியாவின் சிறப்பு படைகளுடனான உறவுகளை மீண்டும் தொடங்குவோம் என ஒபாமா அரசாங்கம் வியாழக்கிழமையன்று அறிவித்துள்ளது, சீனாவின் வளர்ச்சிக்கு எதிராக கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை மேம்படுத்தும் வகையில் முக்கியமான ஒரு நடவடிக்கை ஆகும். குறிப்பாக, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சீனா மீது அமெரிக்கா கோபம் அடைந்துள்ள சூழலில். சீன அரசாங்க அதிகாரிகளுடன் சமீபத்தில் நடைபெற்ற இடர்பாடுகளில் எல்லாமே அமெரிக்க அரசாங்கம் முன்னதைப் போன்று பொறுமையை கடைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com