விபத்தில் சிக்கிய ஒருவர் உயிர் இழப்பு
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய இலங்கைத் தமிழர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். பத்திரிகை விநியோக ஊழியரான இராஜேந்திரன் இராமகிருஷ்ணன் (வயது 35 ) என்பவரே பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக அதிகாலை 6.20 மணியளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றினால் இடிக்கப்பட்டார்.
தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் உடனடியாக லண்டன் றோயல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். ஆயினும் மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் இறந்து விட்டார்.
அவர் மீது காரைச் செலுத்தி இருந்த இளைஞனை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளார்கள். இராஜேந்திரன் இராமகிருஷ்ணன் வீதி விபத்துக்கு முந்திய சில நிமிடங்களில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறாரா? என்கிற கோணத்திலும் அவர்கள் புலனாய்வு விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்கள்.
இராமகிருஷ்ணனின் மனைவியும், இரு குழந்தைகளும் இலங்கையில் இருக்கின்றார்கள்.
.
0 comments :
Post a Comment