விமல்வீரவன்சவின் ராஜனாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு.
ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென அமைக்கப்பட்டுள்ள குழுவைக் கலைக்குமாறு சாகும்வரை உண்ணா நோன்பு இருந்துவரும் அமைச்சர் வீரவன்சவின் ராஜனாமாவை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதமிருந்துவரும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தனது இராஜினாமா குறித்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே 'வெளிநாட்டுச் சக்திகள் எனது அமைச்சுப் பதவியைப் பயன்படுத்தி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
எனது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு எனது அமைச்சுப் பதவி தடையாக இருந்தால் நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
உண்ணா நோன்பு இருந்து வரும் வீரவன்சவை அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். மறுபுறத்தில் வீரவன்சவின் இச்செயற்பாடு இலங்கையை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தும் என ஆரசியல் ஆய்வாளர்கள் பலரும் எச்சரித்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
0 comments :
Post a Comment