கருணாநிதி – த.தே.கூ சந்திப்பு : இலங்கையில் இராணுவ மயமாக்கலாம்.
இந்தியா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முதல்வர் கருணாநிதியை இன்றுகாலை கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இக்சந்திப்பில் சம்பந்தன், சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் பேசுகையில்,
முதல்வர் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. போருக்கு பிறகு இலங்கை தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தவறி விட்டது. வன்னிப் பகுதியில் மீண்டும் ராணுவ மயமாக்கல்தான் நடைபெறுகிறது. இலங்கைத் தமிழர்களை சிறுபாண்மையினராக்க ராஜபக்சே அரசு முயற்சி செய்கிறது.
இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இந்த கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.
அத்துடன் இலங்கைத் தமிழர்களை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டோம் என முதல்வர் கருணாநிதி தங்களிடம் உறுதியளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment