Thursday, July 8, 2010

திரைக்கதை வசனம் ஜனாதிபதி, பிரதான நகைச்சுவைப் பாத்திரம் விமல் வீரவன்ச

அமைச்சர் விமல் வீரவன்ச ஆரம்பித்திருக்கும் சாகும் வரையிலான உணவிரதப் போராட்டத்திற்கான திரைக்கதை வசனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் எழுதப்பட்டதாகவும் இதில் பிரதான நகைச்சுவைப் பாத்திரமே அமைச்சர் விமல் வீரவன்ச எனவும் ஜனநாயக தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமாரதிசாநாயக்க தெரிவிக்கின்றார்.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஆர்பாட்டத்தை கலைக்க வந்த பொலீஸாரிடம் பொல்லுகள் இருக்கவில்லை எனவும் ஆர்பாட்டக்காரர்களை கலைக்க தண்ணீர்த் தாங்கிகள் வரவழைக்கப்படவும் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமாரதிசாநாயக்க தெரிவிக்கின்றார்.

ஜனநாயக ரீதியில் தமது எதிர்ப்பை தெரிவிக்கின்ற உரிமையை நாம் மதிக்கின்றோம். அதே நேரம் இந்த உரிமையை ஏன் எதிர்கட்சியினருக்கு வழங்கவில்லை என்பதே எமது ஒரே கேள்வி. ஆர்பாட்டக்காரர்கள் வெரியர்களை உடைத்துக்கொண்டு செல்வதையும் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்வதையும் நாம் படங்களில் பார்த்தோம். இது எம்மால் முடியுமா?

ஆகவே, ஏன் எதிர்கட்சியினர் நடத்தும் ஆர்பாட்டங்களின் போது மட்டும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்த்தப்படுவதாகவும் இதுவா ஜனநாயகம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமாரதிசாநாயக்க கேள்வி எழுப்பினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com