முள்ளந்தண்டிலிருந்த துப்பாக்கி ரவையை நீக்கிய சாவகச்சேரி வைத்தியர்கள்.
ஒரு வருடத்திற்கு மேலாக பெண் ஒருவரின் இடுப்பு முள்ளந்தண்டில் இருந்து வேதனையை கொடுத்துக் கொண்டிருந்த துப்பாக்கி ரவை ஒன்றை சாவகச்சேரி வைத்தித்தியர்கள் சத்திர சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவு வலைஞர் மடப்பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற மோதலின் போது துப்பாக்கி ரவை பாய்ந்து காயமடைந்த பெண் ஒரு வருடத்திற்கு மேலாக பெரும் கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த இப்பெண்ணுக்கு உடனடியாக வைத்தித்தியர்களால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு ரவை அகற்றப்பட்டது. நாவற்குழி மறவன்புலோவைச் சேர்ந்த எஸ். கோமலேஸ்வரி (வயது- 26) என்பவரின் உடலில் இருந்தே துப்பாக்கி ரவை மீட்கப்பட்டது.
இவ்வைத்தியசாலையில் இவ்வருட முற்பகுதியில் முல்லைத்தீவுப் பகுதியில் காயமடைந்த இரு சிறுவர்களின் தொடை மற்றும் மார்புப் பகுதிகளில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment