வன்னியில் குடிப்பரம்பலை ஏற்படுத்த அரசு அக்கறையுடன் செயற்படுகிறது.
வன்னிப் பிரதேசத்தில் மிகப் பெரிய குடிப்பரம்பலை ஏற்படுத்த அரசாங்கம் அக்கறையுடன் செயற்படுகின்றது. இந்த நோக்கத்தை முற்றுமுழுதாக எதிர்க்கின் றோம். இதனை நிறுத்த அனைத்துத் தமிழ்க் கட்சிக ளும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோல்வியடையச் செய்து விட்டதாகவும் நாட்டில் போர் முடிபுக்கு வந்து விட்டதாகவும் கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. இதன் பின்னர் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கான மறுவாழ்வு குறித்து பல தரப்பிலிருந்து குரல்கள் கொடுக் கப்பட்டு வருகின்றன.
அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப் பட்டு வருகின்றது. இந் நிலையில் தமது அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கும் இப்படியான மறுவாழ்வு நடவடிக்கைகள் தேவை என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மறுவாழ்வு அமைச்சர் டியூ.குணசேகரவிடம் வலியுறுத் தியுள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கோரிக்கை ஏன் என்று சித்தார்த்தன் பி.பி.சி. தமிழோசைக்குக் கூறியதாவது, புனர்வாழ்வு என்ற விடயங்களில் அரசு மாத்திரமல்ல சர்வதேச நிறுவனங்கள், ஐக் கிய நாடுகள் சபை அனைத்துமே விடுதலைப் புலிகளின் மறுவாழ்வைப் பற்றித்தான் கதைக்கின்றார்கள். ஆனால் இந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தங்களுடைய கணவன்மார்களையிழந்த, பிள்ளைகளை யிழந்தவர்கள் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படியான ஒரு பெருந்தொகையான மக்கள் மிகவும் கஷ்டமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக இவர்களுக்கும் புனரமைப்பு வேண்டும் என்பதைத்தான் குண சேகரவிடம் கேட்டிருந்தேன். அனைத்து இயங்களுமே இலங்கை, இந்திய ஒப்பந்தங்களுக்குப் பிறகு கூட ஆயுதம் வைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கும் புனர்வாழ்வளிக்க வேண்டும்.
இது ஒரு சமூகப் பிரச்சினையாக வருகின் றது என்ற ஒரு பயந்தான் எனக்கு இருக்கின் றது. விடுதலைப்புலிகளுக்கு புனர்வாழ்வு கொடுக்க வேண்டாம் என்றும் கூறவில்லை. அனைவருக்குமே கொடுங்கள் என்ற அந்த வாதத்தைத்தான் நாங்கள் முன்வைத்திருக் கின்றோம். இலங்கையில் அரசியல் யாப்பினை மாற்றுவதற்கான இந்தப் பேச்சுவார்த்தை கள் நடைபெறுவதாகச் சொல்லப்பட்டு வரு கின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைத் தவிர்த்து மற்ற பிரதான தமிழ்க் கட்சிக ளாக இருக்கக் கூடிய நீங்கள் அமைச்சர் டக் ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி., ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகள் எல்லாம் இணைந்து ஒரு குழுவை அமைத்து பல முறை கூடி விவாதித்துள்ளீர்கள். ஆனால் இந்தக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது? அடுத்த கட்டமாக என்ன நட வடிக்கை எடுக்க இருக்கின்றீர்கள்? என்பது போன்ற தகவல்கள் வெளிவராமல் இருக்கின்றதே என பி.பி.சி. கேட்டதற்கு பதிலளித்த அவர்,
சர்வதேசத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவாக இருந்தால் என்ன. மற்றமற்ற நாடுகளாக இருந்தால் என்ன தூதரகங்களாக இருந்தால் என்ன அவர்களிடம் தமிழ்க் கட்சிகள் முக்கியமாக அனைத்தும் அதிகாரப் பரவலாக்கம் சம்பந்தமாக வித்தியாசம் வித்தியாசமான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் நீங்கள் அனைவருமே ஒரு பிரச்சினையை முன்வைக்க முடியுமா? என்ற கேள்வியைப் பலர் கேட்டிருக்கின்றார் கள். இதன் அடிப்படையிலேயேதான் இப்படி யானதொரு முயற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. முக்கியமான விடயம் என்னவென்றால் இரண்டு விடயத்தை பார்க்கின்றோம். ஒன்று அனைவருக்குமாக ஒரு பிரேர ணையை முன்வைக்க முடியுமா? அடுத்த தாக இன்று வடக்குக் கிழக்கில் இருக்கக் கூடிய பல பிரச்சினைகள் இந்தப் பிரச்சினை கள் அனைத்தையும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுமாகச் சேர்ந்து முகம் கொடுக்க வேண்டும்.
இந்த இரண்டு விடயங்களின் அடிப்படையிலேயேதான் நாங்கள் இனி பேச்சை ஆரம் பித்திருக்கின்றோம். இந்த விடயங்களிலே எங்களுக்குள்ளே ஒரு ஒற்றுமையிருக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை மிகத் தெளிவாக வைத்திருக்கின்றோம். வன்னிப் பிரதேசத்தில் நிச்சயமாக ஒரு பெரிய குடிப்பரம்பல் மாற்றத்தை கொண்டு வருவதிலே மிக அக்கறையாக அரசு செயற் படுகின்றது என்று எங்களால் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அரசு இந்தக் குடிப்பரம்பலை மாற்ற வேண்டும் என்ற அந்த நோக்கத்துக்காகச் செய்யப்படுகின்ற எந்தவொரு குடியேற்றத் தையும் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம்.
விசமத்தனமான விடயங்களை நிறுத் துவதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவது என்பதில்தான் அக்கறை காட்டுகின் றோம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சேர்த் துக் கொண்டால் அனைத்துக் கட்சிகளுமே இருக்கின்ற ஒரு நிலையில் சர்வதேச ரீதியில் பெரிய பிரச்சினையாக எடுக்க முடியும் என்றார்.
0 comments :
Post a Comment