போலி கடவுச்சீட்டுடன் யாழ் இளைஞன் கைது.
தென்னிந்திய கேரள மாநிலமொன்றில் பிரஞ்சு கடவுச் சீட்டு ஒன்றுடன் பிராண்ஸ் நாட்டுக்கு செல்ல முற்பட்ட இளைஞன் ஒருவனை இந்திய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறிப்பிட்ட பிரஞ்சு பாஸ்போட்டில் தனது புகைப்படத்தினை ஒட்டி இளைஞன் பயணம் செய்ய முயற்சித்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அவரை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டுள்ளவர் நந்தகுமார் ராஜரட்ணம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment