Monday, July 12, 2010

ஜெனரல் பொன்சேகாவின் கோரிக்கையை நீதிமன்று நிராகரித்தது.

நாட்டின் ஜனாதிபதி , அவரது சகோதரர்களை கொலை செய்து இராணுவ புரட்சி ஒன்றின் மூலம் நாட்டின் ஆட்சியை கைப்பற்ற முற்பட்டார் என கைது செய்யப்பட்டு இராணுவத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி , அமெரிக்காவிலுள்ள தனது மகளுடன் தொலைபேசியில் உரையாட அனுமதி கோரி நீதிமன்றில் தாக்கல் செய்த மனிதாபிமான மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

விளக்க மறியலிலுள்ள சந்தேக நபர் ஒருவருக்கு குறிப்பிட்ட வசதி வழங்கப்படுவது இதுவரை நடைமுறையில் இல்லை எனக் குறிப்பிட்டு அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சுகாதார மற்றம் உடற்பயிற்சி தேவைகளுக்காக தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள கூடத்திலிருந்து வெளியே நடக்கச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இக்கோரிக்கையினை சிறைச்சாலைகள் சட்டதிட்டங்களுக்கு அமைய கருத்தில் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 comments :

Anonymous ,  July 13, 2010 at 3:56 PM  

Trust Sri Lankan Law?! Yes we can understand?! from the Political Influence. Judges? oder Politicians

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com