Wednesday, July 7, 2010

மாலைதீவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சினையை தீர்க்கச் செல்கிறார் மஹிந்தா ! !

சுமார் இரண்டுவருடங்களுக்கு முன்னர் முதல் முறையாக ஜனநாயக முறையில் தெரிவான முஹமட் நசீர் தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியல் நெருக்கடியை சந்தித்துள்ளது. அரசின் அமைச்சர்கள் 13 பேர் கடந்தவாரம் பதவிகளை ராஜனாமா செய்ததை அடுத்து எதிர்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றும் நிலைமை தோன்றியுள்ளது. இந்நிலையில் அமைச்சர்களுக்கு லஞ்சம் வழங்கி நாட்டின் ஆட்சியை கைப்பற்ற முயன்றார்கள் என்ற பேரில் எதிர்கட்சியினர் பலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசு மற்றும் எதிர்கட்சியிடையே சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் இன்று காலை நமது ஜனாதிபதி மாலைதீவு விரைந்துள்ளார். ஏற்கனவே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் , ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் மத்தியஸ்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com