முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மீதான லஞ்ச ஊழல் வழக்கு விசாரணைக்கு வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவின் நெருங்கிய உறவினரும் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சருமான அனுரத்த ரத்வத்த மீது தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கினை விசாரணைக்கு எடுக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பான வழியில் செல்வம் சேர்த்தார் என ரத்வத்தை மீது லஞ்ச ஊழல் திணைக்களத்தினர் 2007 ம் ஆண்டு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். ரத்வத்தை சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் வழக்கினை விசாரிக்க முடியாது என முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட மன்று வழக்கினை விசாரிப்பதில்லை என தீர்ப்பளித்தது. தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஊழல் திணைக்களத்தினரால் மேல் முறையீட்டு மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முறையீட்டினை விசாரித்த முவர் அடங்கிய பென்ச் தொடர்ந்து வழக்கினை விசாரிக்குமாறு உயர் நீதிமன்றுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
0 comments :
Post a Comment