தென்கொரியக் கப்பல் இலங்கையில்.
தென்கொரிய கடற்படைக் கப்பலான WANG GEON நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. நல்லெண்ண விஜயமாக வந்த இக்கப்பலுக்கு கொழும்புத் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இக் கப்பலானது 149 மீற்றர் நீளமானது. இக் கப்பலில் 42 அதிகாரிகளும் 264 கடற்படை வீரர்களும் வந்துள்ளனர். இவர்கள் 24ம் திகதி வரை இங்கு தங்கியிருந்து இலங்கை கடற்படையினர் ஒழுங்கு படுத்தியிருக்கும் விசேட நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளனர்.
0 comments :
Post a Comment