முரளிதரன் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு : அரசியலில் ஈடுபடப்போவதில்லை.
இலங்கையின் பிரபல சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தான் ரெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வுபெற தீர்மானித்துள்ளமை குறித்து நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். தான் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனவும் , மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் இறங்கவேண்டிய அவசியம் இல்லை எனவும் அதற்கு ஏராளமான வழிகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
மிகவும் நெருக்கடியான காலங்களில் தமக்கு பக்க பலமாக தமது வெற்றிகளில் மட்டுமன்றி தோல்விகளிலும் பங்கெடுத்துக் கொண்ட நாட்டு மக்கள், அணி வீரர்கள், நிர்வாகத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் தமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சொன்னார்.
அவர் தனது கிறிக்கட் வாழ்கையின் போது அர்ஜூனா ரணதுங்க மற்றும் அரவிந்த ஆர் டீ சில்வா ஆகியோர் செய்த உதவிகள் , ஊக்குவிப்புக்கள் மறக்க முடியாதவை எனவும் அவர்களுக்கு தனது மதிப்பும் நன்றியும் என்றும் உண்டு எனவும் கூறினார்.
தான் ஓய்வு பெறுவதற்கு திடீர்காரணங்கள் எதுவும் கிடையாது எனக்கூறியுள்ள அவர் நன்றாக யோசித்து இம்முடிவினை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் ஊடகவியலாளர்கள் கிரிக்கட் வீரர்கள் தொடர்பாக செய்திகளை வெளியிடும்போது மிகவும் பொறுப்புணர்சியுடன் செய்படவேண்டும் எனவும் வேண்டியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் வீடியோ.
0 comments :
Post a Comment