பொலிஸ் தலைமையகம் முன்னால் சத்தியாகிரகம் : மாணவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
ருகுணு பல்கலைக் கழக மாணவர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டமை தொடர்பாக நியாயமான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கோரி இன்று நாடு பூராகவும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடாத்தவுள்ளனர். பல்கலைகழக மாணியங்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தின் முன்னிருந்து பொலிஸ் தலைமைக் காரியாலயம் வரை நடந்து சென்று பொலிஸ் தலைமை காரியாலயம் முன்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவர் உதுல் பிறேமரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சத்தியாகிரக போராட்டத்தில் பங்குகொள்ளவென வந்துகொண்டிருக்கின்ற மாணவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ள அவர் பலாங்கொடை மற்றும் மாத்தறை பிரதேசங்களில் வைத்து தடங்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment