வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை
பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு பிரதேசத்தை சேர்ந்த உள்ளுர் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொலையுண்ட நபர் ரவீந்திர அல்விஸ் என தெரியவருகின்றது. தனிப்பட்ட பிணக்கு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் கொலைக்கான சந்தேக நபர்கள் இருவரை தேடிவருவதாகவும் அவர்களை விரைவில் கைது செய்யமுடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment