பான் கீ முன் ஐ.நா வதிவிடப் பிரதிநிதியை அமெரிக்காவுக்கு அழைக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதி நீல் பூனே அவர்களை அவசர அவசரமாக அமெரிக்காவுக்கு திருப்பி அழைத்துள்ளதாகவும் ஐ.நா வின் கொழும்பிலுள்ள பிரதான காரியாலயத்தை தற்காலிகமாக மூட திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.நா பேச்சாளர் நியூயோர்க்கில் நேற்று அறிவித்துள்ளார். நிரந்தர வதிவிடப்பிரதிநிதியிடம் இலங்கை நிலைமைகள் குறித்து நேரடியாக கேட்டறிய பான் கீ மூன் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் ஐ.நா சபையின் காரியாலயத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கும் அதன் செயற்திட்டங்களுக்கு தொந்தரவு வழங்குவதற்கும் இலங்கை அரசின் கபினட் அமைச்சர் ஒருவரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை தடுப்பதற்கு இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் விடயம் என பான் கீ மூன் கருதுவதாக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment