வீரவன்சவின் உண்ணா நோன்பு தொடர்கின்றது. அமைச்சர் பதிவியையும் துறந்தார்.
ஐ.நா வினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவை கலைக்குமாறு கோரி விமல் வீரவன்சவினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரம் தொடர்கின்றது. அத்துடன் அவர் தனது வீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இக்கடிதம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சரின் இராஜினாமா தொடர்பான கடிதம் ஏதும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாகவே இது தொடர்பில் தான் அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையின் கபினட் அமைச்சர் ஒருவரினால் ஐ.நா வின் செயற்பாடுகள் இலங்கையில் முடக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஐ.நா வின் செயலாளர் நாயகம் கருதுவதாக ஐ.நா விற்கான பேச்சாளர் நேற்று நியூயோர்கில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment