அமைச்சர்களின் பைலா : மீள்குடியேற்ற அமைச்சு அதிகாரி பதவிநீக்கம்.
மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மகனின் திருமண வைபவத்தில் அமைச்சர் பெர்னாண்டோவும் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் நடனமாடிய காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சம்பவம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சு அதிகாரியொருவர் ஒருவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அமைச்சின் ஊடக இணைப்பு அதிகாரியான ஸ்டான்லி பதிராஜ அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவினால் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரினதும் பிரதியமைச்சரினதும் நடனம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதன்பின் அமைச்சர்கள் இருவரையும் அலறிமாளிகைக்கு அழைத்த ஜனாதிபதி பொது நிகழ்வொன்றில் இவ்வாறு பொறுப்புணர்சி அற்ற முறையில் நடந்து கொண்டமை மஹிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ள மது ஒழுப்பு கொள்கைக்கு விரோதமானது என எச்சரித்துள்ளார்.
அத்துடன் அவ்வாறு குடித்து விட்டு நடனமாடுவதாயின் சாதாரண பொதுமக்களின் பினசன்னம் இல்லாத இடங்களை அவற்றை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment