கண்டி நுகவலையில் படை வீரர்களுக்கு நாளை வீடுகள் கையளிப்பு
நமக்காக நாம் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் நிர்மாணிக்கப் பட்ட 25 வீடுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் படை வீரர்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் லக்க்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
கண்டி, நுகவலையில் நிர்மாணிக்கப் பட்டுள்ள இந்த வீடுகளுக்காக 22 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
குருநாகலையில் 28 வீடுகள் நிர்மா ணிக்கப்படுகின்றன. வசதி குறைந்த படை வீரர்கள் அங்கவீனமுற்ற படை வீரர்கள் மற்றும் இறந்த படை வீரர்களின் உறவினர்கள் ஆகியோருக்கே முதற் கட்டத்தின் போது வீடுகள் வழங் கப்படுகின்றன.
0 comments :
Post a Comment