Saturday, July 17, 2010

புலத்தில் உள்ள புலிகள் ஈழத்து மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். எலிலன்

புலம் பெயர்ந்த நாட்டில் தற்போது நாடத்தும் தேவையற்ற களியாட்டங்கள் புலிகளின் ஆதரவளர்களின் வருமானத்திற்கே. பாடசாலைகள் வருமானம் எங்கே, கோயில்கள் வருமானம் எங்கே, கடைசி நேரத்தில் போரட்டம் என்ற பெயரில் சேர்த்த தொகைப் பணம் எங்கே, இன்னும் எவ்வளவு எல்லாவற்றிக்கும் என்ன பதில்? தங்களை புலிகளின் செயர்பாட்டளர்கள் என்ற, இந்த நம்பிக்கை துரோகிகள் இப்போதும் பணம் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்களே அவர்களை நிச்சயம் அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

காலத்தின் தேவை கருதி எம்மிடம் உள்ள பணம் கொடுத்தோர் விபரம் மிக விரைவில் வெளியிட உள்ளோம். போராட்டத்திற்கு என்று சேர்த்த பணம் எனியாவது அல்லல் படும் எமது அப்பாவி தமிழ் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதே எமது ஆசையும் வேண்டுகோளும் ஆகும். இதை நடைமுறைபடுத்தத் தவறும் பட்சத்தில் யாரிடம் எவ்வளவு பணம் எந்த நாட்டில் இருக்கிறது என்ற முழு விபரமும் அவர்காளின் புகைப்படத்துடன் வெளியிடுவோம்.

தற்போது தமிழ் மக்களின் நன்மை கருதி தாங்கள் அரசுடன் செயல்படப்போகிறோம் என்ற சுத்துமாத்து வேலைகளை தயவு செய்து கைவிட்டு மனச்சுத்தியுடன் உங்களிடம் உள்ளவற்றை ஈழத்தில் நாளுக்கு நாள் செத்துக்கொண்டிருக்கும் எம் இனத்திற்கு உதவுங்கள் இந்தநேரத்தில் கிடைக்கத வேறு சந்தர்பத்தில் கிடைத்து பலன் இல்லை.

முதலில் அவ்மக்களை காப்பாற்றுவோம் அதன் பின்னர் எமது நாடு கடந்த தமிழ் ஈழம் பற்றி பேசுவோம் சுவர் இருந்தால தான் சித்திரம் வரையாலாம். அங்கு மக்காள் இருக்கவேண்டும் தமிழ் ஈழத்தை பார்க்க அகவே சிந்தியுங்கள் இல்லை என்றால் எல்லாரும் அந்த மக்களுக்கு பதில் சொல்லிஅகவேண்டும்.

1 comments :

Anonymous ,  July 18, 2010 at 8:13 PM  

பணம் என்றால் பிணங்களும் வாய் திறக்கும் என்றால், இதுவரைக்கும் பிணங்களை வைத்து பிழைப்பு நடத்திய பேய்கள் சும்மாவா இருக்கும்.

தங்கள் சுயநல, சுகபோக வாழ்வுக்கு தமிழ், தமிழீழம் என்று ஓசி, ஈசியாக பணம், பொருள், சொத்து, சுகம் சேர்த்துப் பழக்கப்பட்ட தமிழீழ புலிமாபியா கூட்டம்,

சுருட்டிய பணம், சொத்துக்கள் எல்லாவற்றையும் பதுக்கிவிட்டார்கள்.

ஏமாளியாகியது அப்பாவித் தமிழினமே

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com