ஐ.நா வின் நிபுணர்கள் குழுவிற்கு அமெரிக்கா ஆதரவு வழங்குமாம்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா வின் பொதுச் செயலாளருக்கு அறிவுரை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவை கலைக்குமாறு வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கொண்டுவரும் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டொன்னர், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என தெரித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவளிக்கும் அதேவேளை, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment