Friday, July 30, 2010

வன்னியில் கண்ணிவெடி அகற்ற சீன இராணுவமும் களமிறங்குகின்றது.

வன்னியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் பங்குகொள்ள சீன இராணுவமும் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை இராணுவத்தின் ஆட்பலம் இரண்டு லட்சத்தினையும் தாண்டியுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ள நிவையில் 2400 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் காணப்படுவதாக கூறப்படும் கன்ணி வெடிகளை அகற்ற இந்தியா , மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல நிறுவனங்களும் களமிறங்கியுள்ள நிவையில் சீனா தனது இராணுவத்தையும் அனுப்ப முயற்சித்துள்ளது.

வடகிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் அமைப்புக்களுக்கு சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளுக்கு புலிகளால் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலப்பரப்பில் இன்று சகல அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல உலகிலுள்ள வல்லரசுகள் பலவும் தமது பலப்பரிட்சையை நடாத்திக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com