கே.பி யின் சொத்துக்கள் எங்கே என அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்வேண்டும்.
புலிகளின் சொத்துகளின் ஒரு பகுதியை தன்னகத்தே வைத்துள்ள குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் எங்கே என அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வேண்டியுள்ளார்.
குமரன் பத்மநாதனுக்குச் சொந்தமான 18 கப்பல்கள் மற்றும் 500 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்க என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள தமது கட்சி விரும்புவதாக தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க, இச் சொத்துக்களை பயன்படுத்தி அரசாங்க ஊழியர்களின் ஊதியத்தையும் உயர்த்துவதுடன் படைவீரர்கள் மற்றும் இடம்பெயர் மக்களின் நலத் திட்டங்களை மேம்படுத்தவும் முடியும் என கூறியுள்ளார்.
அத்துடன் படைவீரர்களுக்காக இப்பொல்லாகமவில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை ஏன் இலவசமாக ஒப்படைக்க முடியாதென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், 1991ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஆட்சி நடத்திய காலத்தில் குவைட் யுத்தம் போன்ற பல்வேறு காரணிகளினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்ததாகவும், அவ்வாறான தருணங்களிலும் ஜனசவிய திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் சரத் பொன்சேகாவை விடுதலை செய்து கே.பியை கைது செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதியை சந்தித்து பேசியதாக கூறிய அவர் மக்களுக்கு சாதகமான அரசியல் யாப்பு மாற்றமொன்று இடம்பெறவேண்டுமானால் தமது கட்சி அதற்கான ஆதரவை வழங்கும் எனவும் அது ரணில் விக்கிரமசிங்க என்ற தனிமனிதனால் எடுக்கக்கூடிய தனி முடிவல்லவெனவும் அதற்கு தமது கட்சியின் உயர் பீட தலைவர்களும் ஜனாதிபதியை சந்தித்து பேசுவர் என கூறியுள்ளார்.
அதே நேரம் மக்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர் எனவும் மக்களுக்கு சரியான முறையில் நிவாரணங்கள் வழங்கப்படுவதில்லை எனவும் மக்கள் வாழ்வதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவும் மக்கள் மூன்று நேரமும் உண்பதற்கு முடியாமல் கஷ்டப் படுகின்றனர் எனவும் நாளுக்கு நாள் விலை அதிகரிப்புகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது எனவும் கூறிய அவர் மக்கள் சுமைகளுக்கு முடிவு காணப்படும் வரை தாம் போராட்டங்களை தொடரப்போவராகவும் கூறியுள்ளார்.
பொருட்களின் விலை வாசியை குறைக்கவும், சம்பள அதிகரிப்பு ஏற்பாடு குறித்ததாகவே எங்கள் போராட்டம் அமைந்திருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment