பான் கீ மூன் அசாதாரண முறையில் நடந்து கொள்கிறார். ஐ.நா மூத்த அதிகாரி குற்றச்சாட்டு.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது விஷ ஊசி ஏற்றும் வகையிலான கருத்தை அந்த சர்வதேச அமைப்பிலிருந்து பதவி விலகும் உயர் அதிகாரி இங்கா பிரிட் தெரிவித்திருப்பதுடன், பதிலளிக்கும் கடப்பாட்டிலிருந்தும் பான் கீ மூன் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார்.
அவர் ஐ.நா. செயலாளர் நாயகம் மீது அசாதாரணமான முறையில் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்களை முன்வைத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக சிறப்பான பதிவுகளைப் பெற்றுக்கொண்டவர் என்ற ரீதியில் பான் கீ மூன் வளர்த்தெடுத்திருந்த பிரதிமைக்கு சவாலாக 50 பக்கங்களைக் கொண்ட இங்காவின் அறிக்கை காணப்படுகிறது.
2007 இல் பதவியேற்ற பான் கீ மூன் ஐ.நா.வின் புகழை நிலைநிறுத்திக் கொள்வதில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தவர்.
விசாரணைப் பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சித்ததாகவும் தனக்குத் தேவையான அதிகாரிகளை அமர்த்தும் முயற்சிக்கு இடையூறு விளைவித்தாகவும் இங்கு சாடியுள்ளார்.
தங்கள் நடவடிக்கைகள் கவலையளிப்பவை மட்டுமல்ல. மோசமான முறையில் குற்றச்சாட்டுக்குட்படுத்தக் கூடியவை ஆகும். உங்கள் நடவடிக்கைகள் போன்று முன்னொருபோதும் செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை. எனது அபிப்பிராயமானது உங்களுக்கே மிகவும் பாரதூரமான அசௌகரியத்தைத் தோற்றுவிக்கும் என்று இங்கா பிரிட் அக்லீனியஸ் கூறியுள்ளார்.
செயலகமானது இப்போது நாசமான நிலைமைக்கு சென்றுகொண்டிருப்பதாக நான் கவலையுடன் கூறுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைப்பின் ஊழல் மோசடிக்கெதிரான பல முக்கியமான உண்மைகள் கவனிக்கப்படாமலும் அல்லது தவறாக உரைபெயர்க்கப்பட்டும் இங்காவின் குறிப்புகளில் காணப்படுவதாக நம்பியார் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 வருடங்களாக உயர்மட்ட விசாரணைகயாளர்கள் சிலரை ஐ.நா. நீக்கியுள்ளது. வெற்றிடங்கள் பலவற்றை நிரப்பவில்லை. அவற்றில் ஒன்று உள்மட்ட மேற்பார்வை சேவைகள் அலுவலகத்திற்கான பதவியாகும். பதவிக்கு 2006 தொடக்கம் வெற்றிடம் காணப்படுகிறது. ஐ.நா.வின் விசாரணைப் பிரிவின் செயற்பாடுகள் குறித்து நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் என்று ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் மார்க் கோன்பிளா கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment