சீமான் - முருகன் வேலூர் சிறையில் சந்திப்பு.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலை வழக்குக் கைதி நளினியின் கணவரான முருகனை சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் நடந்த கூட்டத்தில் ஆவேசமாக பேசினார் சீமான். சிங்களர்களுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமானால் தற்போது ஒரு வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை கைதியான முருகனை சீமான் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment