வாக்காளர் இடாப்பு பதிவு ஆரம்பம். யாழில் இல்லாதோர் பெயர் நீக்கப்படுமாம்.
யாழ் மாவட்டத்திற்கான 2010 ம் ஆண்டு புதிய வாக்காளர் இடாப்பு பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. புதிய பதிவின்போது மாவட்டத்தை விட்டு வெளியேறியுள்ளோரின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படவுள்ளது. இதற்கான அறிவுறுத்தல் தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து யாழ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தேர்தல் செயலக உத்தியோகத்தர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் நவம்பர் 1ம் திகதி முதல் 28ம் திகதி வரை புதிய இடாப்பு பார்வைக்காக வைக்கப்படும் எனவும் உதவி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பீ.சுமணசிறி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment