த.தே கூட்டமைப்பின் இரட்டைவேடத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது.
வடக்கு,கிழக்கை மீண்டும் இணைக்குமாறு கோரும் எந்தவித உரிமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. அவ்வாறு வடக்கு, கிழக்கு மீண்டும் இணைக்கப்படுவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளாதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட எம்.பி.யான ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சு மீதான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசியல் யாப்புத் திருத்தம் செய்யப்படும்போது சிறுபான்மை இனம் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், முஸ்லிம்களின் கோரிக்கைகளும் அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment